நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது . ராஜ்கோட்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து இந்திய அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது .
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி-20 போட்டி நடக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தை, ரூ.5 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். அதேபோல் நியூசிக்கு எதிரான தொடரை வெல்வதை கோஹ்லி அண்ட் கோ என்ஷூர் செய்ய உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. முதலில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று இந்தியா வென்றது. அடுத்ததாக துவங்கிய டி-20 போட்டித் தொடரில், டெல்லியில் நடந்த ஆட்டத்தில் வென்று 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 5 டி-20 போட்டிகள் அனைத்திலும் நியூசிலாந்து அணியே வென்று அசைக்க முடியாத அணியாக இருந்தது. டெல்லி போட்டியில் வென்று, அந்த மோசமான சாதனையை இந்தியா முறியடித்தது
india vs new zealand 2nd t20, new zealand won by 40 runs